செய்திகள்,பரபரப்பு செய்திகள் மருத்துவரின் அலட்சியம்: பிணவரையில் நோயாளி உயிருடன் மீட்பு…

மருத்துவரின் அலட்சியம்: பிணவரையில் நோயாளி உயிருடன் மீட்பு…

மருத்துவரின் அலட்சியம்: பிணவரையில் நோயாளி உயிருடன் மீட்பு… post thumbnail image
மால்டா :- மருத்துவர்களின் கவனக்குறைவுக்கு இந்த சம்பவத்தை விட மோசமான உதாரணத்தை யாரும் காணமுடியாது. 40 வயதான மமதா சர்கார் என்ற அந்த பெண் நோயாளி உடல்நிலை மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இன்று மதியம் மமதாவின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் அவர் மரணத்தின் விளம்பில் இருந்துள்ளார். அப்போது மமதாவை பரிசோதித்த மருத்துவரான மோன்டால் அவர் இறந்துவிட்டதாக சான்றளித்ததாக பி.டி.ஐ. செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. பின்னர் அவரது குடும்பத்தாருக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மமதாவின் உடலை பெற பிணவரைக்கு சென்றபோது “பிணம்” கைகளையும், கால்களையும் அசைத்துள்ளது.

உடனடியாக மீண்டும் மமதாவின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை பிணவரையிலிருந்து இதய சிகிச்சை பிரிவிற்கு மாற்றினர். ஆனாலும் அவரது உடல்நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும் இறந்துவிட்டதாக சான்றளித்த மோண்டால் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆனால் மேற்கு வங்கத்தை பொறுத்தவரை மருத்துவர்களின் அலட்சியம் தொடர்கதையாகி வருகிறது. அங்கு குழந்தை இறப்புகள் அதிகமாக இருப்பதற்கு மருத்துவர்களின் அலட்சியமே முக்கிய காரணம். தற்போது இந்த சம்பவமும் மருத்துவர்களின் சுபாவத்தை உறுதிப்படுத்துகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி