அஜீத் தற்போது கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக திரிஷா மற்றும் அனுஷ்கா நடித்து வருகிறார்கள். மேலும் இப்படத்தில் இவர்களுடன் அருண் விஜய், விவேக், தேவி அஜீத், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். அஜீத் இப்படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ரசிகர்கள் மற்றும் சினிமா உலகத்தினர் தல 55 என்றே அழைத்து வருகிறார்கள்.
இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் பெயரை விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. அஜீத் இப்படத்தில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆதலால் இப்படத்தின் பெயர் ‘சத்யா’ வாக இருக்கக் கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி