சென்னை:-ரசிகர்களின் எதிர்பார்ப்பு கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம்தான். ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ் நிறுவனம் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரித்து வரும் இப்படத்தில் அஜீத்துடன் அனுஷ்கா, திரிஷா, அருண்குமார், விவேக் முதலானோர் நடிக்க, இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்து வருகிறார். அஜீத் – கௌதம் மேனன் கூட்டணி அமைத்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஏறக்குறைய 75 சதகிவித படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இன்னும் படத்திற்கு இன்னும் அதிகாரபூர்வமாக டைட்டில் வைக்கவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் படத்தின் புரொமோஷன் வேலைகளையும் விரைவில் துவங்கவிருக்கிறார்களாம்.விநாயக சதுர்த்தி அன்று இப்படத்தின் தலைப்பை அறிவிக்க இருக்கிறார்கள். அன்றே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடவிருக்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி