செய்திகள்,முதன்மை செய்திகள் இந்திய பகுதிக்குள் 25 கி.மீ. நுழைந்த சீன ராணுவம்!… பரபரப்பு தகவல்…

இந்திய பகுதிக்குள் 25 கி.மீ. நுழைந்த சீன ராணுவம்!… பரபரப்பு தகவல்…

இந்திய பகுதிக்குள் 25 கி.மீ. நுழைந்த சீன ராணுவம்!… பரபரப்பு தகவல்… post thumbnail image
புதுடெல்லி:-ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் கடந்த ஆண்டு இந்திய பகுதிக்குள் நுழைந்த ராணுவம் கொட்டகை அமைத்து 3 வாரம் தங்கியிருந்தது. 4 முறை கொடி சந்திப்பு கூட்டங்கள் நடத்தியபின்னர் சீனப் படையினர் திரும்பிச் சென்றனர். தற்போது அதே பகுதியில் உள்ள பர்த்சே பகுதியில் 25 கி.மீ. முதல் 30 கி.மீ. வரை முன்னேறிய சீன ராணுவம் அங்கு முகாமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்திய படையினர் நேற்று தங்கள் முகாமில் இருந்து எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகில் ரோந்து சென்றபோது இதனை கண்டுபிடித்ததாகவும், புதிதாக வரையறுக்கப்பட்ட நடைமுறைகளின்படி எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் தங்கள் முகாமிற்கு திரும்பிச் சென்றதாகவும் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பின்னர் இன்று காலையில் அங்கு சென்று பார்த்தபோதும் சீன வீரர்கள் அந்த இடத்தை விட்டு அகல மறுத்து, ‘இது சீனப் பகுதி, திரும்பிச் செல்லுங்கள்’ என்று கொடியை காட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி