இந்த பகுதிகளில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. இதில் ரஜினி 21 நாட்கள் நடிக்கிறார். மற்ற நாட்களில் அவர் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. இதற்காக ரஜினி கடந்த சில தினங்களுக்கு முன்பு சிமோகா வந்து சேர்ந்தார். சிமோகா அருகில் உள்ள ஜோக் அருவியில், ரஜினி, சோனாக்ஷி சின்ஹா நடித்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது.அருவியிலிருந்து சிறிது தொலைவில் பிரமாண்ட அணை செட்டும், அதற்கு அருகில் 40 அடி உயர சிவன் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தொடர்ந்து படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. கடைசி நாளில் அணையை வெடிகுண்டு வைத்து தகர்த்து ஊருக்குள் வெள்ளம் பாய்ந்து வருவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. இதற்காக ஹாலிவுட்டிலிருந்து தொழில்நுட்ப கலைஞர்கள் வர இருக்கிறார்கள்.சிமோகா படப்பிடிப்பில் தினமும் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டு நடித்து வருகிறார்கள். சமையல் கலைஞர்கள் மட்டும் 100 பேர் பணியாற்றுகிறார்கள். ஒரு நாளைக்கு 25 முதல் 50 லட்சம் வரை படப்பிடிப்புக்கு செலவாகிறதாம்.
படப்பிடிப்பு நடைபெறுவதை கேள்விப்பட்டு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வேடிக்கை பார்க்க வருகிறார்கள். ஆனால் அவர்கள் படப்பிடிப்பு நடக்கும் இடத்திலிருந்து ஆயிரம் அடிக்கு அப்பாலேயே தடுத்து நிறுத்தப்பட்டு விடுகிறார்கள். ஜோக் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி குமார் தலைமையில் தினமும் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 50க்கும் மேற்பட்ட தனியார் பாதுகாப்பு குழுக்களையும் தயாரிப்பாளர் ஏற்பாடு செய்திருக்கிறார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நல்லபடியாக முடிய வேண்டும் என்று ரஜினி தீர்த்தஹள்ளி ஸ்ரீராமேஷ்வரா கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகளை செய்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி