சென்னை:-இதுவரை என்னைப்போலவே என் மகனும் ஒரு நாளைக்கு பெரிய ரொமான்டிக் ஹீரோவாக வருவான் என்று மார்தட்டி வந்த நவரச நாயகன் கார்த்திக், இப்போது என் காலம் வேறு, என் மகனின் காலம் வேறு. அதனால் அவர் காலத்திற்கேற்ற நடிகராகவே வரட்டும் என்று இப்போது ரொமான்டிக் கதைகளில் இருந்து விடுபட்டு, லேட்டஸ்ட் கமர்சியல் கதைகள் பக்கம் திரும்பியிருக்கிறார்.
ஆனால், இதுவரை கெளதமிடம் கதை சொல்ல கால்கடுக்க நடந்து கொண்டிருந்த இயக்குனர்களோ இப்போது அவர் மீதிருந்த கமர்சியல் நம்பிக்கை உடைந்து போனதால், இவரை வைத்து ஹிட் கொடுக்க முடியாது என்று பின் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். அதனால், இதுவரை என் மகனின் சம்பளம் கோடி ரூபாய் என்று கொக்கரித்துக்கொண்டு வந்த நவரச நடிகர், இப்போது கொடுப்பதை கொடுங்கள், கால்சீட் தயாராக இருக்கிறது என்று இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் துரத்திக்கொண்டே திரிகிறார். ஆனால் இவரது தலையைக் கண்டாலே அவர்கள் வேறுபக்கமாக தெறித்து ஓடிக் கொண்டிருக்கிறார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி