செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடை பெற்றார் ஜெயவர்த்தனே!…

டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடை பெற்றார் ஜெயவர்த்தனே!…

டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடை பெற்றார் ஜெயவர்த்தனே!… post thumbnail image
கொழும்பு:-பாகிஸ்தான்– இலங்கை அணிகள் மோதும் 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. இது ஜெயவர்த்தனேயின் கடைசி டெஸ்ட் ஆகும். முதல் இன்னிங்சில் அவர் 4 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.2–வது இன்னிங்சில் நேற்றைய ஆட்ட நேர முடிவில் அவர் 49 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார் இன்றைய ஆட்டத்தில் அவர் மேலும் 5 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

ஜெயவர்த்தனே கடைசி இன்னிங்சில் 54 ரன் எடுத்தார். இதோடு அவரது டெஸ்ட் சகாப்தம் முடிந்தது.37 வயதான ஜெயவர்த்தனே 1997–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு எதிராக கொழும்பில் நடந்த டெஸ்டில் அறிமுகம் ஆனார்.149 டெஸ்டில் விளையாடி 11,814 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 49.84 ஆகும். 34 சதமும், 50 அரைசதமும் அடித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2006–ம் ஆண்டில் ஒரு இன்னிங்சில் 374 ரன் குவித்ததே அதிகபட்ச ரன் ஆகும்.

டெஸ்டில் அதிக ரன் எடுத்த 2–வது இலங்கை வீரர் ஜெயவர்த்தனே ஆவார். சங்ககரா முதல் இடத்தில் உள்ளார். சர்வதேச அளவில் அதிக ரன் எடுத்த வீரர்களில் அவர் 7–வது இடத்தில் உள்ளார்.
ஜெயவர்த்தனே இலங்கை அணிக்கு 38 டெஸ்டில் கேப்டனாக இருந்துள்ளார். இதில் 18–ல் வெற்றி கிடைத்தது. 12 டெஸ்டில் தோற்றது. 8 டெஸ்ட் ‘டிரா’ ஆனது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி