செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் சகாரா நிறுவனத்தின் சொத்துக்களை வாங்குகிறார் புருனே சுல்தான்!…

சகாரா நிறுவனத்தின் சொத்துக்களை வாங்குகிறார் புருனே சுல்தான்!…

சகாரா நிறுவனத்தின் சொத்துக்களை வாங்குகிறார் புருனே சுல்தான்!… post thumbnail image
நியூயார்க்:-பங்கு விற்பனை மூலம் முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டிய 20 ஆயிரம் கோடி ரூபாயை திரும்பத் தரத் தவறியதாக சஹாரா குழுமத்தின் தலைவரான சுப்ரதா ராய் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. உச்சநீதிமன்றம் உத்தரவால் கைது செய்யப்பட்ட ராய் தற்போது திகார் சிறையில் உள்ளார்.இந்நிலையில் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். அம்மனுவை விசாரித்த நீதிமன்றம் 10000 கோடி ரூபாயை ஜாமின் தொகையாக செலுத்த உத்தரவிட்டது.

ஜாமின் தொகையை செலுத்துவதற்காக வெளிநாடுகளில் உள்ள தனது சொத்தை விற்க ராய் முடிவு செய்தார்.இதற்காக திகார் சிறையில் அவருக்கு பிரத்யேகமாக அறை ஒதுக்கி தரப்பட்டது. இந்த அறையிலிருந்து அவர் தனது சொத்துக்கள் விற்பது தொடர்பாக பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தனக்கு சொந்தமான லண்டனில் உள்ள க்ராஸ்வெனர் ஹவுஸ் ஓட்டல், நியூயார்க்கில் உள்ள பிளாசா ஓட்டல் மற்றும் ட்ரீம் ஓட்டலை விற்பது தொடர்பாக ராய் பேச்சுவார்தை நடத்திவருகிறார்.

தற்போது ராயின் மூன்று ஓட்டல்களையும் வாங்குவதற்கு புருனே சுல்தான் ஹஸ்ஸனால் பொல்கையாஹ் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதற்கான விலையை அவர் நிர்ணயித்துள்ளதாகவும் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. புருனே சுல்தானுக்கு சொந்தமான முதலீட்டு நிறுவனம் ஒன்று இந்த மூன்று ஓட்டல்களையும் 2 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது. இதனால் வரும் வாரத்தில் இரு தரப்புக்கும் இடையேயான ஒப்பந்தம் ஏற்பட்டு பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி