செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் இந்தோனேசியா படகு விபத்தில் 23 பேர் உயிருடன் மீட்பு!…

இந்தோனேசியா படகு விபத்தில் 23 பேர் உயிருடன் மீட்பு!…

இந்தோனேசியா படகு விபத்தில் 23 பேர் உயிருடன் மீட்பு!… post thumbnail image
ஜகார்த்தா:-கிழக்கு இந்தோனேசியாவில் உள்ள கொமோடோ தீவுகள் அங்குள்ள உடும்பு வகைகளுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற பகுதியாகும். இவற்றை கண்டு ரசிப்பதற்காக ஏராளமான வெளிநாட்டுப் பயணிகள் ஆண்டுதோறும் இங்கு வருகின்றனர்.லோம்போக் தீவிலிருந்து சுமார் மூன்று நாள் பயண தூரம் கொண்ட இந்த தீவை சுற்றிப் பார்க்க 20 வெளிநாட்டுப் பயணிகள், ஒரு வழிகாட்டி மற்றும் 4 படகு ஊழியர்களைக் கொண்ட பயணக்குழு கடந்த வியாழன் இரவு லோம்போக்கிலிருந்து கொமோடோ நோக்கி ஒரு படகில் பயணித்தது.

சும்பாவா தீவின் அருகேயுள்ள சங்கியாங் எரிமலைத் தீவின் அருகே சென்றபோது, விபத்துக்குள்ளான அந்தப் படகு கவிழ்ந்து, மூழ்கத் தொடங்கியது. சகப் பயணிகள் உதவியுடன் 10 பேர் அப்போதே காப்பாற்றப்பட்டனர்.இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் அப்பகுதி வழியாக சென்ற மற்றொரு படகில் விரைந்த மீட்புப் படையினர், உயிர் காக்கும் படகுகள் மற்றும் உடைகளின் உதவியுடன் கடல் நீரில் மயங்கிய நிலையில் மிதந்துக் கொண்டிருந்த மேலும் 13 பேரை உயிருடன் மீட்டனர்.அவர்கள் அனைவருக்கும் சும்பவா தீவில் உள்ள சேப் நகர ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த படகில் சென்ற மேலும் 2 வெளிநாட்டுப் பயணிகள் என்ன ஆனார்கள்? என்பது தெரியவில்லை.அவர்களை தேடும் பணியில் இந்தோனேசிய ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி