செய்திகள்,திரையுலகம் உடல் எடையை பற்றி கவலைப்பட மாட்டேன் – பிரபல நடிகை…!

உடல் எடையை பற்றி கவலைப்பட மாட்டேன் – பிரபல நடிகை…!

உடல் எடையை பற்றி கவலைப்பட மாட்டேன் – பிரபல நடிகை…! post thumbnail image
சித்தியுடன் சண்டை போட்டுக் கொண்டு சென்னையில் இருந்து வெளியேறிய அஞ்சலி ஐதராபாத்தில் தங்கி இருந்தார். பல மாதங்களாக படங்களில் நடிக்காமலேயே இருந்தார். அவருக்கு ரகசிய திருமணம் நடந்து விட்டதாக செய்திகள் பரவின. இதனை அவர் மறுத்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘கீதாஞ்சலி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். இப்படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. தமிழில் ஜெயம் ரவி ஜோடியாகவும் நடிக்கிறார். அஞ்சலி முன்பைவிட குண்டாகி இருக்கிறார். உடல் எடையை குறைக்க அவர் முயற்சிக்கவில்லை.

இதுகுறித்து அஞ்சலி கூறும்போது, ‘உடல் எடை பற்றி நான் கவலைப்படவில்லை. ரசிகர்களும் அதை பிரச்சினையாக பார்க்கவில்லை. ஒல்லியாக, குண்டாக என்றெல்லாம் நான் பார்க்க மாட்டேன். ஆரோக்கியமாக இருப்பதுதான் முக்கியம்’ என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி