சென்னை:-கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்த ‘ஜிகர்தண்டா‘ படம் சமீபத்தில் வெளியாகி நன்றாக ஓடி வருகிறது.தமிழில் படத்திற்குக் கிடைத்த வரவேற்பை அறிந்த இந்தி தயாரிப்பு நிறுவனம் ஒன்று படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பேசி வருகிறதாம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘பீட்சா’ படமும் ஹிந்தியில் ரீமேக்காகி கடந்த மாதம் வெளியானது. ஆனால், படம் தோல்வியைத் தழுவியது.
பொதுவாக, இந்தியில் முன்னணி நட்சத்திரங்கள் நடித்த ஹாரர் படங்களே தோல்வியைத் தழுவும் நிலையில், அறிமுகமில்லாத நட்சத்திரங்கள் நடித்த ‘பீட்சா’ படம் தோல்வியைத் தழுவியதில் ஆச்சரியமில்லை என்கிறார்கள் பாலிவுட்டினர்.இந்த சூழ்நிலையில் ‘ஜிகர்தண்டா’ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய முடிவெடுத்திருப்பது ஆச்சரியமான விஷயம்தான் என்றாலும், முன்னணி நட்சத்திரங்கள் படத்தில் நடித்தால் மட்டுமே வெற்றியை சுவைக்கலாம் என்கின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி