செய்திகள் நைஜீரியாவில் இருந்து வெளியேற இந்திய டாக்டர்கள் அனுமதி!…

நைஜீரியாவில் இருந்து வெளியேற இந்திய டாக்டர்கள் அனுமதி!…

நைஜீரியாவில் இருந்து வெளியேற இந்திய டாக்டர்கள் அனுமதி!… post thumbnail image
அபுஜா:-நைஜீரியாவில் ‘எபோலா’ வைரஸ் நோய் அதி தீவிரமாக பரவி வருகிறது. எனவே, அங்குள்ள ஆஸ்பத்திரிகளில் ஏராளமானவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் அபுஜாவில் பிரிமஸ் இன்டர்நேசனல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் இந்திய டாக்டர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களில் கபில் சவுகான், தினேஷ்குமார், ஹேமந்த் ஜிங்கர், லோகேஷ் சந்திரா மற்றும் ராகேஷ் லக்ரா ஆகிய 5 பேரும் அங்கு பணி புரிய மறுப்பு தெரிவித்துள்ளனர்.

எபோலோ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் படி ஆஸ்பத்திரி நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாக தெரிவித்தனர். இந்தியா திரும்ப முடியாமல் தங்களது பாஸ்போர்ட்டுகளை பிடித்து வைத்து இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினர்.இதை ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்துள்ளது. இந்த டாக்டர்களை ‘எபோலா’ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்படி வற்புறுத்தவில்லை என்று கூறியுள்ளது. அதே நேரத்தில் விரும்பினால் அவர்கள் இந்தியா திரும்பலாம் என்றும் தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி