புதுடெல்லி:-இந்துக்களின் புனித நதியாக கருதப்படும் கங்கை நதி இமயமலையில் இருந்து வங்காள விரிகுடா வரை சுமார் 2,500 கிமீட்டர் தூரம் உள்ளது.இதில் தொழிற்சாலை கழிவுகளும் குப்பைகளும் தேங்கியுள்ளன.மக்கள் இயக்கத்தின் மூலம் நாங்கள் கங்கை நதியை தூய்மைப்படுத்துவோம் என மத்திய நீர் வள துறை அமைச்சர் உமா பாரதி தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், கங்கை நதி தூய்மை படுத்தும் பணி தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், புனித நதியான கங்கை நதியை நீங்கள் பாதுகாப்பீர்களா. இந்த விஷயத்தில் எந்த அவசரத்தையும் மத்திய அரசு காட்டவில்லை.கங்கை நதிய சுத்தப்படுத்துதல் போன்ற திட்டத்திற்கு அரசின் உறுதியான நடவடிக்கையும் முழு ஈடுபாடும் தேவை. கங்கை நதியை எப்படி தூய்மைப்படுத்த போகிறேம் என்ற திட்டம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் உச்ச நிதிமன்றம் தெரிவித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி