தன் நகைச்சுவையால் பலரையும் குலுங்க குலுங்க சிரிக்க வைத்து, கவலைகளை மறக்கடித்து, அனைவரின் குடும்பத்திலும் ஒருவராய் உறவாடப்பட்ட வடிவேலு சிறு இடைவேளைக்குப் பிறகு தெனாலிராமன் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து மீண்டும் தன் நகைச்சுவை பயணத்தை துவங்கினார். எதிர்பார்த்தது போலவே தெனாலிராமன் படமும் வடிவேலுவின் நகைச்சுவையும் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது. தற்போது வடிவேலு மீண்டும் ஒரு புதியப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
தெனாலிராமன் படத்தை இயக்கிய யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்க இருக்கிறார். 1970களில் நடக்கக் கூடிய கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக இருக்கிறது.
இப்படத்தை ஒஹோ பிக்சர்ஸ் சார்பாக ஜி.ராம்குமார் தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கவுள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவை கவனிக்கிறார். தோட்டாதரணி படத்தின் கலையை கவனிக்கிறார். படத்தொகுப்பு ராஜாமுகமது செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்குகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி