செய்திகள்,திரையுலகம் நேற்று சிம்பு – ஹன்சிகா!…இன்று சித்தார்த் – சமந்தா!…

நேற்று சிம்பு – ஹன்சிகா!…இன்று சித்தார்த் – சமந்தா!…

நேற்று சிம்பு – ஹன்சிகா!…இன்று சித்தார்த் – சமந்தா!… post thumbnail image
சென்னை:-நடிகர் சித்தார்த் சில வருடங்களுக்கு முன் சமந்தா உடன் ஒரு படத்தில் சேர்ந்து நடித்தார். இவர்களை இணைத்தும் கிசுகிசுக்கள் வரத் தொடங்கின. அந்த செய்திகளை உண்மையாக்குவதுபோல், சித்தார்த் சமந்தா இருவரும் சேர்ந்து காளஹஸ்தி, திருப்பதி உட்பட பல கோயில்களுக்கு சென்றனர். எனவே விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று செய்திகள் வெளியாகத்தொடங்கின.

எதிர்பார்ப்புக்கு மாறாக சமந்தா நடிப்பில் பிஸியாகிவிட்டார். அது மட்டுமல்ல முன்பைவிட, படு கவர்ச்சியாகவும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். தற்போது ஒரு கோடி சம்பளம் வாங்குமளவுக்கு ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துக் கொண்டு தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் நம்பர் ஒன் நடிகையாக உயர்ந்துவிட்ட இந்த நேரத்தில் கல்யாணம் செய்து கொள்ள சமந்தாவுக்கு விருப்பமில்லையாம்.

இது தொடர்பாக சித்தார்த் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படாமல் போய், லவ் பிரேக்கப்பாகிவிட்டதாம். அதனால்தான், சமந்தாவை எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்? என்று சித்தார்த்திடம் யார் கேள்வி கேட்டாலும், அது என் பர்சனல் விஷயம் என்று எரிந்து விழுகிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி