இந்த சம்பவத்திற்கு மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, முதல்வர் மம்தா அரசியல் சட்டத்தை அவமதித்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் போலீஸ் சீருடையை அவமதிக்கும் விதமாக உள்ளதாகவும், அந்த பெண் காவலர் மீது நடவடிக்கை எடுத்து போலீஸ் சீருடையின் கண்ணியத்தை காப்பாற்ற வேண்டும் என்று ஒரு தரப்பினரும், அது ஒரு பொது நிகழ்ச்சி இந்த பிரச்சனையை பெரிது படுத்தக் கூடாது என்று இன்னொரு தரப்பினரும் கூறி வந்தனர்.
இந்நிலையில் இன்று இதுகுறித்து கருத்து தெரிவித்த ஷாருக், வீர் சாரா திரைப்படத்தில் நடித்தபோது ராணுவ ஜவான்களுடன் தான் நடனமாடியதாக தெரிவித்தார். 60 மற்றும் 70 ஆம் ஆண்டுகளில் எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திரைப் பிரபலங்கலங்கள் வீரர்களுடன் நடனமாடியதை ஷாருக் நினைவுபடுத்தினார்.மும்பையில் கூட ஒரு சில நேரங்களில் தான் காவல்துறையினருடன் நடனமாடியதாக தெரிவித்தார். இம்முறை பெண் ஒருவருடன் தான் நடனம் ஆடியதால் ஆண், பெண் பாகுபாடு கொண்ட சிலர் முட்டாள்தனமாகவும், சிறுபிள்ளைத்தனமாகவும் கேள்வியெழுப்புவதாக ஷாருக் கூறினார். ஆனால் இப்படியெல்லாம் பேசுவது தவறு என்று அவர் தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி