கடந்த ஜூலை 12ம் தேதி முதல் முறையாக சூப்பர்மூன் தோன்றியது. நேற்று முன்தினம் 2வது முறையாக சூப்பர்மூன் விண்ணில் தோன்றியது. இது 14 சதவீதம் பெரியதாகவும் மற்றும் 30 சதவீதம் அதிக வெளிச்சத்துடனும் இருந்தது. அறிவியல் கூற்றின்படி, இதற்கு பெரிகீ நிலவு என்று பெயர். பூமியை நீள்வட்ட பாதையில் சுற்றி வரும் சந்திரன் 50 ஆயிரம் கி.மீட்டர் மிக அருகில் வரும்பொழுது அதனை பெரிகீ என அழைக்கின்றனர்.
இது மிக தொலைவில் பூமியை விட்டு இருக்கும்போது அபோகீ என அழைக்கப்படுகிறது. கடந்த 1979ம் ஆண்டில் ஜோதிட வல்லுநர் ரிச்சர்டு நாலே என்பவர் நிலவின் இவ்வியக்கத்தை சூப்பர்மூன் என அழைத்தார். இந்நிகழ்வின்போது, பூமி, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும். அடுத்த சூப்பர்மூன் வருகிற செப்டம்பர் 9ம் தேதி விண்ணில் தோன்றும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி