படத்தின் இணை தயாரிப்பாளரான கருணாமூர்த்தி கூறும்போது, ‘லைக்கா’ நிறுவனத்துக்கும் ராஜபக்சேவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார். இலங்கையில் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு உதவும் பணிகளில் லைக்கா நிறுவனம் ஈடுபட்டுள்ளது என்றும் கூறினார். ஆனாலும் படத்துக்கு எதிர்ப்புகள் தொடர்கின்றன. தீபாவளிக்கு ‘கத்தி’ படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் தமிழ் அமைப்பு தலைவர்களை சந்தித்து பேசினர்.
லைக்கா நிறுவனம் மீதான குற்றச்சாட்டை மறுத்து அவர்கள் விளக்கம் அளித்தார்கள். இதையடுத்து ‘கத்தி’ படத்தை திரையிட தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
விக்ரமன் கூறும்போது, ‘‘தமிழர்கள் இணைந்து இப்படத்தை எடுக்கின்றனர். எனவே அடிப்படை ஆதாரமில்லாத வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். சீமான் கூறும்போது, விஜய்யின் ‘கத்தி’ படத்தை எதிர்க்க மாட்டேன் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி