சென்னை:-‘கத்தி‘ திரைப்பட சர்ச்சையைத் தொடர்ந்து, நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியது:-நடிகர் விஜய் நடித்து வெளிவரவிருக்கும் ‘கத்தி’ திரைப்படத்தை இலங்கையைச் சேர்ந்த நிறுவனம் தயாரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த சிலர், விஜய் வீட்டை முற்றுகையிடப் போவதாகத் தகவல் வெளியானது.இதைத் தொடர்ந்து நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டுக்கு முன்பாக 50-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். ஆனால், ஞாயிற்றுக்கிழமை இரவு வரை எந்தவொரு அமைப்பைச் சேர்ந்தவர்களும் அந்தப் பகுதியில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடவில்லை.இருப்பினும், இது குறித்த சர்ச்சை இன்னும் ஓயாததால், விஜய் வீட்டுக்குத் தொடர்ந்து பாதுகாப்பு அளிக்குமாறு உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி