செய்திகள்,விளையாட்டு ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்:இறுதிபோட்டிக்கு முன்னேறியது சானியா-காரா ஜோடி!…

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்:இறுதிபோட்டிக்கு முன்னேறியது சானியா-காரா ஜோடி!…

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்:இறுதிபோட்டிக்கு முன்னேறியது சானியா-காரா ஜோடி!… post thumbnail image
மான்ட்ரியல்:-கனடாவின் மான்ட்ரியல் நகரில் நடைபெற்று வரும் ரோஜர் கோப்பை டென்னிஸ் தொடரில் மகளிர் இரட்டையர் அரையிறுதி ஆட்டத்தில் 4-ம் தரநிலையில் உள்ள சானியா மிர்சா-காரா பிளாக் (ஜிம்பாப்வே) ஜோடி, 2 ஆம் நிலையிலுள்ள ஹ்சீஹ் சூ வேய்- பெங் ஷுவாய் ஜோடியை எதிர்கொண்டது.

ஒரு மணி நேரம் ஐம்பது நிமிடங்ளுக்கு மேலாக நீடித்த பரபரப்பான போட்டியில் சானியா-காரா பிளாக் ஜோடி 7-6(3), 3-6, 13-11 என்ற செட்களில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஹ்சீஹ் சூ வேய்- பெங் ஷுவாய் ஜோடியுடன் நேருக்கு நேர் மோதிய போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை தோல்வியடைந்த சானியா-காரா ஜோடி இன்றைய வெற்றியின் மூலம் தங்கள் தோல்வியை முடிவுக்கு கொண்டுவந்தனர்.இறுதிப் போட்டியில் சானியா-காரா பிளாக் ஜோடி முதல் தர வீராங்கனைகளான சாரா எர்ரானி-ரொபேர்டா வின்சியுடன் மோத உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி