இவர் நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்று தந்தது. தற்போது இளம் கதாநாயகர்கள் மத்தியில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது ‘தனி ஒருவன்’, ரோமியோ ஜூலியட்’, சுராஜ் இயக்கும் பெயரில்லாத படம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.ஜெயம் ரவி சில வருடங்களுக்கு முன்பு ஆர்த்தி என்ற பெண்ணை மணந்தார். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் இவர்களுக்கு மற்றொரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தையும், ஆர்த்தியும் நலமாக இருப்பதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர். மற்றொரு ஆண் குழந்தை பிறந்த சந்தோஷத்தை ஜெயம் ரவியும் அவர்களுடைய குடும்பத்தினரும் கொண்டாடி வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி