செய்திகள்,பரபரப்பு செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் எபோலா நோயை கட்டுப்படுத்த உலகளாவிய அவசரநிலை பிரகடனம்: ஐ.நா!…

எபோலா நோயை கட்டுப்படுத்த உலகளாவிய அவசரநிலை பிரகடனம்: ஐ.நா!…

எபோலா நோயை கட்டுப்படுத்த உலகளாவிய அவசரநிலை பிரகடனம்: ஐ.நா!… post thumbnail image
ஜெனீவா:-மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில், இந்த ஆண்டு தொடக்கத்தில், ‘எபோலோ’ வைரஸ் கிருமி தாக்குதல் காரணமாக ‘எபோலா’ தொற்றுநோய் தாக்கியது. அப்போதிருந்து அண்டை நாடுகளிலும் பரவி, இதுவரை 932 பேரை பலி கொண்டுள்ளது. மேலும், ஆயிரத்து 700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எபோலா நோய், மேற்கு ஆப்பிரிக்காவை தாண்டி பரவுவது தவிர்க்க முடியாதது என்று அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஐ.நா. அமைப்பான உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலை கமிட்டி கூட்டம், ஜெனீவாவில் 2 நாட்களாக நடைபெற்றது.அதன் முடிவில், எபோலா நோயை கட்டுப்படுத்த, உலகளாவிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் மார்கரெட் சான் கூறியதாவது:-

எபோலா நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து விமானத்தில் வரும் அனைத்து பயணிகளையும் பரிசோதிக்க வேண்டும். விமான நிறுவனங்கள், அந்நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு விமானங்களை இயக்கும்போது முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.உலகம் முழுவதும் உள்ள நாடுகளும், விமான நிலையங்களும் அந்நோயை கண்டறிந்து தடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மற்ற நாடுகள் உதவ முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி