செய்திகள்,திரையுலகம் மறைந்த கணவரின் நினைவாக டிஸ்கோ சாந்தி வாங்கிய படம்!…

மறைந்த கணவரின் நினைவாக டிஸ்கோ சாந்தி வாங்கிய படம்!…

மறைந்த கணவரின் நினைவாக டிஸ்கோ சாந்தி வாங்கிய படம்!… post thumbnail image
சென்னை:-ஜெயசீலன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கியிருக்கும் படம் ‘பள்ளிக்கூடம் போகாமலே’. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் டிஸ்கோ சாந்தியின் கணவரும், மறைந்த பிரபல தெலுங்கு நடிகருமான ஸ்ரீஹரி நடித்திருக்கிறார். தன் கணவர் நடித்திருக்கும் கடைசிப் படம் என்பதோடு படம் மிகசிறப்பாகவும் வந்திருப்பதை அறிந்த டிஸ்கோ சாந்தி பெரும்தொகைக்கு இப்படத்தின் தெலுங்கு உரிமையை பெற்றிருக்கிறார்.

உடனடியாக தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு, அதற்காக மீண்டும் சில காட்சிகள் நேரடி தெலுங்கு படத்திற்கான நேர்த்திக்காக எடுக்கப்பட்டது. இப்படத்தில் ஸ்ரீஹரியோடு, கணேஷ் வெங்கட்ராம், ராஜ் கபூர், இயக்குனர் வெங்கடேஷ், தேவதர்ஷினி மற்றும் சிங்கப்பூர் துரைராஜ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி