செய்திகள் 2004ம் ஆண்டு சுனாமியில் அடித்து செல்லப்பட்ட சிறுமி 10 வருடங்களுக்கு பின்பு பெற்றோருடன் இணைந்தார்!…

2004ம் ஆண்டு சுனாமியில் அடித்து செல்லப்பட்ட சிறுமி 10 வருடங்களுக்கு பின்பு பெற்றோருடன் இணைந்தார்!…

2004ம் ஆண்டு சுனாமியில் அடித்து செல்லப்பட்ட சிறுமி 10 வருடங்களுக்கு பின்பு பெற்றோருடன் இணைந்தார்!… post thumbnail image
இந்தோனேஷியா:-கடந்த 2004ம் ஆண்டு இந்தோனேஷியா சுமத்ரா தீவு அருகே ஆழ்கடலில் ஏற்பட்ட நிலஅதிர்வு காரணமாக எழுந்த சுனாமி பேரலைகள் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியது. இதில் சுமார் 2 லட்சத்திற்கும் மேலானோர் பலியாகினார். பலர் மாயமானார்கள். காணாமல் போன அவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர் என்று அறிவிக்கப்பட்டது.

ராவ்தாதுல் ஜன்னா என்ற இந்தோனேஷியாவை சேர்ந்த சிறுமி 2004 சுனாமியில் அடித்து செல்லப்பட்டார். சிறுமி இறந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அவரை அவரது பெற்றோர்கள் உயிருடன் கண்டுபிடித்துள்ளனர். கடவுள் இந்த அற்புதத்தை எங்களுக்கு கொடுத்துள்ளார். எனது மகள் 4 வயதில் காணாமல் போனார். ஆனால் எனது மகள் உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது என்று ஜன்னாவின் தாயார் ஜமாலியா தெரிவித்துள்ளார்.ஜமாலியாவின் சாயலில் இருந்த ஜன்னா பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றபோது ஜமாலியாவின் சகோதரர் பார்த்துள்ளார்.

இதனையடுத்து அவருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின்பேரில் விசாரிக்கையில் சிறுமி சுனாமியில் அடித்து செல்லப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது. சுனாமியில் அடித்துவரப்பட்ட சிறுமியை அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீட்டு வளர்த்து வந்துள்ளனர். ஜமாலியாவும், ஜன்னாவை பார்த்து தனது மகள் என்று ஏற்றுக் கொண்டார். அவரது கணவரும், சிறுமியை பார்த்து எனது மகள் என்று உறுதி செய்தார்.
இதனையடுத்து சிறுமியை மீனவர்கள் மகிழ்ச்சியுடன் அவளது பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர். என்னை விட்டு பிரிந்த எனது மகள் 10 ஆண்டுகளுக்கு பின்னர் என்னுக்கு கிடைக்க செய்த கடவுளுக்கு நான் மிகவும் கடமைப்பட்டு இருக்கிறேன் என்று ஜமாலியா கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி