செய்திகள்,திரையுலகம் ஷாப்பிங் மாலில் பாட்டு பாடிய ஸ்ருதிஹாசன் – அக்ஷராஹாசன்!…

ஷாப்பிங் மாலில் பாட்டு பாடிய ஸ்ருதிஹாசன் – அக்ஷராஹாசன்!…

ஷாப்பிங் மாலில் பாட்டு பாடிய ஸ்ருதிஹாசன் – அக்ஷராஹாசன்!… post thumbnail image
சென்னை:-நடிகர் கமல்ஹாசனின் மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன். இவர்களில் ஸ்ருதிஹாசன் பாடகி, இசையமைப்பாளர், நடிகை என பன்முகம் கொண்டவர். தற்போது தென்னிந்திய மற்றும் இந்தி படங்களில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அக்ஷராஹாசன், இயக்குநர் கனவோடு சினிமாவில் நுழைந்து இப்போது அவரும் ஹீரோயினாக களமிறங்கியுள்ளார்.

இந்தியில் அமிதாப்பச்சன், தனுஷ் நடித்து வரும் ஷமிதாப் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில், அக்கா-தங்கை இருவரும் ஒரு ஷாப்பிங் மாலில் ஷாப்பிங் செய்தனர். ஷாப்பிங் செய்து கொண்டு இருந்த ஸ்ருதி திடீரென சத்தம் போட்டு பாட்டு பாட தொடங்கிவிட்டார். அவருக்கு துணையாக அக்ஷராவும் கம்பெனி கொடுத்து பாட்டு பாடியுள்ளார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் யூ-டூப்பில் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ஸ்ருதிஹாசன் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, இந்த வீடியோ கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பு எடுக்கப்பட்டது. ஷாப்பிங் மாலில் மளிகை பொருட்கள் வாங்கியபோது பார்சிலி ரோஸ்மெரி தைம் ஆல்பத்தை பார்த்தவுடன் எங்களையும் அறியாமல் பாட தொடங்கிவிட்டோம். மிகவும் மகிழ்ச்சியான மறக்க முடியாத தருணம் அது என்று நடிகை ஸ்ருதிஹாசன் தன் டுவிட்டரில் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி