அவர் நினைத்ததற்கு ஏதுவாக, அவரது பிறந்த நாள் இம்மாதம் வருகிறது. எனவே தன் பிறந்த நாளை முன்னிட்டு வெளிநாடு செல்ல தீர்மானித்திருக்கிறாராம். லண்டன் அல்லது அமெரிக்கா செல்ல முடிவு செய்திருக்கும் யுவன் சங்கர்ராஜா, அங்கேயே தன் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாட இருக்கிறார். தன்னுடைய பிறந்தநாளை வெளிநாட்டில் கொண்டாடினாலும், தன்னுடன் தன் குடும்பத்தினர் அனைவரும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம் யுவன் சங்கர்ராஜா. எனவே தன்னுடன் தன் குடும்ப உறுப்பினர்களையும் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.
சில மாதங்களுக்கு முன் யுவன் சங்கர்ராஜா, இஸ்லாம் மதத்துக்கு மாறியதால் அவர் மீது வருத்தத்தில் இருந்தார் இளையராஜா. சமீபகாலமாகத்தான் மகன் உடன் சகஜமாக பேச ஆரம்பித்திருக்கிறார். இந்நிலையில் இளையராஜாவை யுவன் அழைத்திருக்கிறார். முதலில் வர முடியாது என மறுத்துவிட்டாராம். பிறகு என்ன நினைத்தாரோ மனதை மாற்றிக் கொண்டு, மகனின் அழைப்பை தட்ட முடியாமல் யுவன் உடன் வெளிநாட்டுக்கு வருவதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டாராம் இளையராஜா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி