புதுடெல்லி:-ரெயில்வே துறையில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும் என்றும், பொது தனியார் பங்களிப்புடன் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் பா.ஜனதா அரசு தாக்கல் செய்த முதல் ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
அரசின் இந்த நடவடிக்கை ரெயில்வே துறையை தனியார்மயமாக்கும் முயற்சிக்கு கொண்டு செல்லும் என்று கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதேபோல் பாதுகாப்புத்துறையில் அந்நிய முதலீட்டை அதிகரிக்கும் என்று பட்ஜெட்டில் அறிவித்ததையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ரெயில்வேயில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவீதமாக உயர்த்தும் பட்ஜெட் அறிவிப்புக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி