இது பற்றி அவர் கூறியதாவது:இதுவரை சில்க் ஸ்மிதா பற்றி வெளியான படங்களில் அவரது வாழ்க்கையை மையமாக வைத்து வெவ்வேறு கோணங்களில் காட்சிகள் அமைக்கப்பட்டன. ஆனால் மராட்டிய மொழியில் உருவாகவுள்ள சில்க் பற்றிய கதையில் அவரது வாழ்க்கையின் இருண்ட பகுதிகளும், சினிமாவில் முன்னேறுவதற்காக அவர் பட்ட கஷ்டத்தை மையமாக கொண்டும் உருவாக உள்ளது. இதற்கான அனுமதியை அவரது குடும்பத்தினரிடம் பெற்றிருக்கிறேன்.
சினிமாவில் அவர் நடித்த விதத்தை வைத்து எதிர்மறையாகவே சில்க் ஸ்மிதா இமேஜ் மக்கள் மனதில் பதிந்திருக்கிறது. அவருக்குள் இருந்த நல்ல குணத்தை யாரும் ஹைலைட் செய்யவில்லை. இதில் அதற்கு முக்கியத்துவம் தருவேன். மராட்டிய மொழியில் பிரச்னைக்குரிய நடிகை என்று கூறப்படும் ஒருவர் சில்க் வேடத்தில் நடிக்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி