இதுதொடர்பாக வழக்கு நடந்து வருகிறது. அதேசமயம் இயக்குநர் களஞ்சியமும், அஞ்சலி மீது புகார் கொடுத்தார். தனது ஊர் சுற்றி புராணம் படத்தை முடித்து தர வேண்டும், அதுவரை அவர் வேறு படங்களில் நடிக்க கூடாது, அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்று முறையிட்டார். ஆனால் அஞ்சலியோ எப்போதும் போல படங்களில் நடித்து வருகிறார். தற்போது சுராஜ் இயக்கத்தில், ஜெயம் ரவியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது சித்தி, அவரது மகனுக்கு திருமணம் ஏற்பாடுகள் செய்து வந்தார், திருமணமும் விரைவில் நடக்க இருந்த நிலையில், இப்போது அந்த திருமணம் நின்று விட்டது. இதற்கு காரணம் அஞ்சலி தான் என்று அவரது சித்தி பாரதிதேவி நினைக்கிறார். தன் மீதுள்ள வெறுப்பால், பெண் வீட்டாரிடம் சென்று எதை எதையோ சொல்லி இந்த திருமணத்தை நிறுத்தி விட்டதாக அஞ்சலி மீது தன் சகாக்களிடம் குற்றம் சாட்டி வருகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி