அந்த படத்தில் ஆரம்பத்தில் வித்யூத்தின் காட்சிகளை அமைதியாக கொண்டு சென்ற முருகதாஸ், கடைசியில் விஜய்யுடன் அவர் மோதும் அதிரடியான சண்டை காட்சியை வைத்து வித்யூத்தை ரசிகர்கள் மத்தியில் அழுத்தமாக பதிய வைத்தார். அதனால் இப்போது ஆக்சன் பிரியர்களை கவர்ந்த வில்லனாகிவிட்டார் வித்யூத் ஜம்வால்.அதனால் இப்போது அவரை சூர்யா நடித்துள்ள அஞ்சான் படத்திலும் நடிக்க வைத்துள்ளார் லிங்குசாமி.
முந்தைய இரண்டு படங்களையும் விட இந்த படத்தில் வித்யூத்துக்கு இன்னும் அதிரடியான வில்லன் ரோலாம். முக்கியமாக தமிழைப்போலவே, தெலுங்கிலும அவர் பிரபலமான வில்லன் என்பதால் படத்தின் தொடக்கத்தில் இருந்தே சிங்கம் சூர்யாவுடன் அவர் கர்ஜிக்கும் காட்சிகள் தியேட்டர்களையே அலற வைக்கும் என்கிறார்கள்.பில்லா-2வில் அஜீத், துப்பாக்கியில் விஜய், அஞ்சானில் சூர்யா என தமிழின் தற்போதைய மூன்று முன்னணி ஹீரோக்களுடனும் பலப்பரீட்சை பார்த்து விட்டார் இந்தி வில்லன் வித்யூத் ஜம்வால்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி