திருமணத்திற்கு முன்பு அனில் ஜாண் டைட்டசுக்கும் பெங்களூரைச் சேர்ந்த பெண்ணுக்கும் ஏற்கனவே திருமணம் நடந்ததாகவும், மீராஜாஸ்மினுடன் அனில் ஜாண் டைட்டசுக்கு திருமணம் நடக்கும் போது பெங்களூர் பெண் அங்கு வந்து தகராறில் ஈடுபடுவார் என்றும் தகவல்கள் வெளியானது.இது பற்றி அனில் ஜாண் டைட்டஸ் திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் பெங்களூர் பெண்ணுடன் திருமணம் நடந்து விவாகரத்தும் ஆகி விட்டது. இப்போது அவரால் தனக்கு இடையூறு ஏற்படும் என்பதால் மீராஜாஸ்மின் உடனான திருமணத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். போலீசாரும் அதன்படி பாதுகாப்பு கொடுக்க அனில் ஜாண் டைட்டஸ்– மீராஜாஸ்மின் திருமணம் நடந்து முடிந்தது.
அதன் பிறகு இருவரும் துபாயிக்கு சென்று விட்டனர். அவர்களின் பெற்றோர் அனில் ஜாண் டைட்டஸ்– மீராஜாஸ்மின் திருமணத்தை திருவனந்தபுரம் மாநகராட்சியில் பதிவு செய்து அதற்கான சான்றிதழை கேட்டிருந்தனர். 5 மாதங்கள் ஆன நிலையில் இதுவரை அவர்களுக்கு திருமண சான்றிதழை திருவனந்தபுரம் மாநகராட்சி வழங்கவில்லை.இது பற்றி அதிகாரிகள் கூறும் போது, திருமண பதிவு சான்றிதழ் கோருபவர்கள் அதில் எந்த வில்லங்கமும் இல்லை என்று சான்றளிக்க வேண்டும். ஆனால் மீராஜாஸ்மினை திருமணம் செய்த அனில் ஜாண் டைட்டஸ் ஏற்கனவே இன்னொரு பெண்ணை திருமணம் செய்து விவகாரத்து ஆனவர் என போலீசில் புகார் கொடுத்திருந்தார்.
ஆனால் அவர் மீராஜாஸ்மினை திருமணம் செய்து கொண்டதற்கான சான்றிதழ் கேட்ட போது அதில் முதல் மனைவியை விவாகரத்து செய்ததற்கான சான்றிதழை இணைக்க வில்லை. அவர் அந்த சான்றிதழை மாநகராட்சியில் சமர்பித்த பின்பு அது சரிதானா? என்பதை மாநகராட்சி உறுதி செய்த பின்பே அவர்களுக்கு திருமண பதிவு சான்று வழங்கும், அதுவரை சான்றிதழ் வழங்கப்படமாட்டாது என்றனர்.
அனில் ஜாண் டைட்டஸ் குடும்பத்தினரும் இதுவரை மாநகராட்சியை அணுகி தங்களுக்கு சான்றிதழ் இதுவரை தராதது ஏன்? என்று கேட்கவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி