செய்திகள்,திரையுலகம் கேம் சென்ட்டிமெண்ட்டை உடைக்குமா அஞ்சான்!…

கேம் சென்ட்டிமெண்ட்டை உடைக்குமா அஞ்சான்!…

கேம் சென்ட்டிமெண்ட்டை உடைக்குமா அஞ்சான்!… post thumbnail image
சென்னை:-கோச்சடையான் படம் வெளியாவதற்கு முன் அப்படத்தின் கேம் வெளியிடப்பட்டது. இப்படத்தை அடுத்து விஜய் இயக்கிய சைவம் படத்திற்கும் கேம் உருவாக்கப்பட்டது. இந்த கேமை உருவாக்கியவர்கள் நடிகர் நாசரின் மகன் பைசலும், அவரது நண்பர்களும். இவர்கள்தான் பின்னர் சாலை விபத்தில் சிக்கினர். கோச்சடையான், சைவம் படங்களை அடுத்து தமிழில் கேம் உருவாக்கப்பட்டிருப்பது அஞ்சான் படத்துக்குத்தான்.

இந்த கேமை சில தினங்களுக்கு முன் சூர்யா வெளியிட்டார். அஞ்சான் கேம் வெளியான சில தினங்களில், அந்த கேம் சிறுவர்களின் மனதில் வன்முறையை பதிய வைப்பதாக விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், கேம் வெளியிட்ட தமிழ்ப்படங்கள் பெரிதாக வெற்றியடையாது என்று சிலர் சொல்லத்தொடங்கி உள்ளனர். அதற்கு வலு சேர்க்கும் வகையில் ஏற்கனவே கேம் வெளியிட்ட படங்களின் வசூலை சுட்டிக்காட்டுகிறார்கள். இந்த கேம் சென்ட்டிமெண்ட்டை அஞ்சான் படம் உடைக்குமா. என்பது விரைவில் தெரியவரும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி