கொழும்பு:-இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ பாதுகாப்புத்துறை இணைய தளத்தில் ஜெயலலிதா மற்றும் பிரதமர் மோடியை கொச்சைப்படுத்தி கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சியின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே அக்கட்டுரையை இலங்கை அரசு நீக்கியது. மேலும், மன்னிப்பும் கேட்டுக்கொண்டது.
பாராளுமன்றத்தில் இப்பிரச்சினையை உறுப்பினர்கள் எழுப்பியதையடுத்து நேற்று மத்திய அரசு இலங்கை தூதரை அழைத்து கண்டித்தது.இந்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே, கட்டுரை வெளியானதற்கு வருத்தம் தெரிவிப்பதாக கருத்து வெளியிட்டுள்ளார். மேலும், கட்டுரை இணைய தளத்தில் வெளியானது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி