சென்னை:-தமிழில் மிகப் பெரிய வெற்றியடைந்த தனுஷின் வேலையில்லா பட்டதாரி படம் இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது.இந்தியில் தமிழில் நடித்த தனுஷும், தெலுங்கில் அல்லு அர்ஜுனும் நடிக்க இருக்கின்றனர்.
இந்நிலையில் வேலையில்லா பட்டதாரி இந்தி ரீமேக்கில் தனுஷுக்கு ஜோடியாக அலியா பட் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.தொடர்ச்சியாக மூன்று வெற்றி படங்களை கொடுத்த அலியா பட் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க விருப்பதால், இப்போதே இந்த படத்திற்கு பாலிவுட்டில் எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது.ஆனால் அலியா தனுஷுடன் நடிக்க ரூ. 3 கோடி சம்பளம் கேட்டுள்ளார். தனுஷ் தரப்பும் எந்தவித மறுப்பும் இன்றி அவர் கேட்ட தொகையை தர ஒப்புக் கொண்டனராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி