செய்திகள்,திரையுலகம் கிரீஸில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை டாப்சி!…

கிரீஸில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை டாப்சி!…

கிரீஸில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை டாப்சி!… post thumbnail image
சென்னை:-‘ஆடுகளம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை டாப்சி. அதன்பின் வந்தான் வென்றான், ஆரம்பம் படங்களில் நடித்தவர் இப்போது லாரன்ஸ் இயக்கி வரும் முனி-3-யான கங்காவில் நடித்து வருகிறார். இவைதவிர வை ராஜா வை, இந்தியில் ஒருபடம் என்று பிஸியாக இருப்பவர், தற்போது ஓய்வுக்காக தனது சகோதரியுடன் கிரீஸ் சென்றுள்ளார். அப்படியே அங்கு தனது 27வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார்.

இதுகுறித்து டாப்சி கூறியிருப்பதாவது, இந்தாண்டு முழுக்க நான் பிஸியாக இருக்கிறேன். அதனால் கிடைத்த கொஞ்ச ஓய்வு நேரத்தை கிரீஸில் கொண்டாடி வருகிறேன். அடுத்தாண்டு இங்கு வருவேனா என்பது தெரியாது. பொதுவாக நான் எனது பிறந்தநாளை பெரிதாக கொண்டாடுவது கிடையாது. எனது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் வீட்டிலேயே கொண்டாடுவேன். மேலும் நான் பார்ட்டியை விரும்பாதவள், அது எனக்கு பிடிக்காது. இருந்தாலும், இந்தாண்டு எனது பிறந்தநாளை எனது சகோதரியுடன் கிரீஸில் கொண்டாட முடிவு செய்தேன், சிறப்பாக கொண்டாடினேன், ஆகஸ்ட் 4ம் தேதி இந்தியா திரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி