இந்த விழாவில் தெலுங்கு மாஸ் நடிகர் நாகார்ஜூனா கலந்து கொண்டு இசையை வெளியிட, இயக்குனர் ராஜமெளலி பெற்றுக் கொண்டார். விழாவில் பேசிய சூர்யா, ராஜமெளலி இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா? என்று பல நடிகர்கள் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். முன்பு ஒருமுறை அந்த வாய்ப்பு எனக்கு வந்தது. ஆனால் நான் அதை மறுத்து விட்டேன். அதனால் தற்போது அவர் இயக்கிக்கொண்டிருக்கும் பாகுபலி படத்தில் ஒரு காட்சியில் தலைகாட்டச் சொன்னாலும் கூட தயாராக இருக்கிறேன் என்று தனது விருப்பத்தை அப்போது வெளிப்படுத்தினார்.
இதேபோல் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவும் லிங்குசாமி இயக்கத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது, இயக்குனர் லிங்குசாமியின் அனைத்து படங்களையும் நான் பார்த்திருக்கிறேன். எனக்கும் இப்போது ஒரு பெரிய ஆசை உள்ளது. இன்னொரு தடவை செயினை அறுத்து இழுக்கற சீனை, லிங்குசாமியோட படத்துலதான் செய்யணும்னு நினைக்கிறேன் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி