சென்னை:-நடிகை திரிஷா தற்போது அஜீத், ஜெயம்ரவியுடன் நடித்துக்கொண்டிருக்கிறார். இதையடுத்து, சிம்புவுடன் நடிக்க இருக்கிறார்.இந்நிலையில், அடுத்தபடியாக அவருக்கு படங்கள் பெரிதாக இல்லாததால், தற்போது 31 வயதாகும் த்ரிஷா விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்றும் திரைக்குப்பின்னால் ஒரு செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த தகவலை த்ரிஷாவுக்கு வேண்டப்பட்டவர்கள் அவரிடம் சொல்லியிருக்கிறார்கள்.
அதனால், தற்போது அதுபற்றி தனது நெருங்கிய ஹீரோ, டைரக்டர், தயாரிப்பாளர்களை தொடர்பு கொண்டு என்னைப்பற்றி திருமண வதந்திகள் பரவுவது ஒன்றும் புதிய விசயமில்லை. அவ்வப்போது யாராவது இப்படி கொளுத்திப்போட்டு விடுகிறார்கள். ஆனால், என்னைப்பொறுத்தவரை இப்போதைக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை அதனால் அவ்வப்போது பரவும் இந்த திருமண செய்தியைப்பற்றி யாரும் குழப்பிக்கொள்ள வேண்டாம். குறிப்பாக என்னை படங்களுக்கு புக் பண்ணுவதை தவிர்க்க வேண்டாம். நான் திருமணம் செய்ய இன்னும் பல ஆண்டுகள் உள்ளது என்று தெளிவுபடுத்தி வருகிறார் த்ரிஷா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி