பல எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் ஊக்குவிப்பு சக்தியாக இருந்துள்ள இந்த மலைப்பகுதி தனியார்வசம் சென்றால் உயரடுக்கு செல்வந்தர்களின் விளையாட்டு மைதானமாக மாறிவிடக்கூடும் என்ற அச்சம் அங்குள்ள உள்ளூர் மக்களிடம் எழுந்தது.இதனால் ‘பிலென்கதரா நண்பர்கள் அமைப்பு’ என்ற ஒரு இயக்கம் இந்த மலை தனியாருக்கு விற்பனை செய்யப்படுவது தடுக்கப்பட்டு சமூக சொத்தாக மாற்றப்படவேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி வந்தது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை அன்றி இவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்த எச்-எச் சொத்து விற்பனை நிறுவனரான ஜான் ராப்சன் இதற்கான ஒரு விற்பனை வாய்ப்பும் வந்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
பின்னர் இந்த மலையை வாங்குவதற்கான தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தவர் இந்தியத் தொழிலதிபர் லக்ஷ்மி மிட்டல் என்பதுவும், நிர்ணயிக்கப்பட்டுள்ள விற்பனைத் தொகையைவிடக் கூடுதலாக அவர் கேட்டிருப்பதுவும் வெளித் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இந்த நண்பர்கள் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், சொத்து வரி பாக்கிக்காக விற்பனை நடைபெற இருப்பதால் விரைவில் நியாயமான முடிவு மேற்கொள்ளப்படும் என்றும் எச்-எச் சொத்து விற்பனை நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி