சென்னை:-இந்த வருடத்தில் வெளியான தமிழ்ப்படங்களின் டீஸர் மற்றும் டிரைலர்களில் ‘கோச்சடையான்‘ படத்திற்கு அடுத்தபடியாக ‘அஞ்சான்‘ டீஸரையே அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் பார்த்துள்ளனர்.கடந்த மாதம் 5 ஆம் தேதி வெளியிடப்பட்ட ‘அஞ்சான்’ டீஸரை இதுவரை 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளனர்.
இந்த வருட ஆரம்பத்தில் வெளியான ‘ஜில்லா‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை இதுவரை 28 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.அதேபோல் ரஜினியின் ‘கோச்சடையான்’ படத்தின் டிரைலரை இதுவரை 45 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி‘ படத்தை 24 லட்சத்திற்கு மேற்பட்டோரும், இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான விஜய்யின் ‘கத்தி‘ படத்தின் மோஷன் போஸ்டரை 18 லட்சத்திற்கு மேற்பட்டோரும் பார்த்துள்ளனர். இந்த எண்ணிக்கையை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது ‘கோச்சடையான்’ படம் முதல் இடத்தையும், ‘அஞ்சான்’ படம் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி