செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் எபோலா நோய் தாக்கிய 2 அமெரிக்கர்கள் அட்லாண்டாவிற்கு அழைத்து வரப்பட்டனர்!…

எபோலா நோய் தாக்கிய 2 அமெரிக்கர்கள் அட்லாண்டாவிற்கு அழைத்து வரப்பட்டனர்!…

எபோலா நோய் தாக்கிய 2 அமெரிக்கர்கள் அட்லாண்டாவிற்கு அழைத்து வரப்பட்டனர்!… post thumbnail image
சிகாகோ:-கடந்த பிப்ரவரியில் ஆப்பிரிக்க நாடான கினியாவில் தென்படத் துவங்கிய எபோலா விஷத் தொற்றுநோய் தற்போது லைபீரியா, சியரா லியோனிலும் பரவி அங்குள்ள மக்களை பலி வாங்கிக் கொண்டிருக்கின்றது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக அங்கு அமைதிப் பணியில் ஈடுபட்டுள்ள தங்களின் வீரர்களை அமெரிக்கா திரும்ப அழைத்துள்ளது.

இதனிடையில் அங்கு மருத்துவப் பணி புரிந்துவந்த டாக்டர் கென்ட் பிராட்லியும், அமைதிப் பணி ஊழியரான நான்சி ரைட்போலும் இந்த நோய்த் தொற்றினால் பீடிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் தனிமையான மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். இவர்களில் நான்சிக்கு புதிய மருத்துவமுறை ஒன்று பரிசோதிக்கப்பட்டபோதிலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. மாறாக அவரது நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. அதேபோல் டாக்டர் பிரன்ட்லியால் எபோலா நோய்த்தாக்கத்திலிருந்து காப்பாற்றப்பட்ட 14 வயது சிறுவனின் ரத்தம் அவருக்கு ஏற்றப்பட்டுள்ளது. இவனது ரத்தத்தில் இருக்கும் நோய் எதிர்ப்பு அணுக்கள் இவரது உடல்நிலை சீரடைய உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று இவர்கள் இருவரும் மிகவும் பாதுகாப்பான முறையில் விமானம் மூலம் அமெரிக்காவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் உடனடியாக அட்லாண்டா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இந்த நோயாளிகள் சிகிச்சைக்கு முன்னர் முதலில் பாதுகாப்பான, சுகாதாரமான சூழலில் வைக்கப்படவேண்டும் என்றும் சிஎன்என்னின் மருத்துவத் தகவல் தொடர்பாளரான டாக்டர் சஞ்சய் குப்தா தெரிவித்துள்ளார். இவர்களைத் தவிர மின்னசோட்டா மாநிலத்திலிருந்து லைபீரியாவின் நிதித்துறையில் பணி புரிந்துவந்த பாட்ரிக் சாயர்(40) என்ற அமெரிக்கர் கடந்த 20ம் தேதி தனது தாயகத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது நைஜீரியாவின் லாகோஸ் விமான நிலையத்தில் இறங்கியதும் உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார் என்பது இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி