செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் மீண்டும் வடகறி இயக்குனருடன் இணையும் ஜெய்…!

மீண்டும் வடகறி இயக்குனருடன் இணையும் ஜெய்…!

மீண்டும் வடகறி இயக்குனருடன் இணையும் ஜெய்…! post thumbnail image
ஜெய், ஸ்வாதி, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடித்து வெளியான படம் ‘வடகறி’. இப்படத்தின் மூலம் வெங்கட்பிரபுவின் உதவியாளர் சரவணராஜன் இயக்குநராக அறிமுகமானார்.

தற்போது சரவணராஜன் இயக்கும் அடுத்த படத்தில் ஜெய் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திலும் ஜெய்யுடன், ஆர்.ஜே பாலாஜி நடிக்கிறார்.படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்றுவருகிறது. ஜெய் தற்போது ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கிவரும் ‘வலியவன்’ படத்தில் நடித்துவருகிறார்.

ஜெய், ஆண்ட்ரியா இணைந்து நடிக்கும் ‘வலியவன்’ படப்பிடிப்புகள் முடிந்ததும், இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கும் என்று தெரிவிக்கிறது படக்குழு .

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி