செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் அடிதடி மட்டுமே கமர்ஷியல் இல்லை – பிரபு சாலமன் பேட்டி…

அடிதடி மட்டுமே கமர்ஷியல் இல்லை – பிரபு சாலமன் பேட்டி…

அடிதடி மட்டுமே கமர்ஷியல் இல்லை – பிரபு சாலமன் பேட்டி… post thumbnail image
கயல் படத்தின் டப்பிங் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த பிரபு சாலமன் படத்தின் கதைக்கரு மற்றும் அதனை பதிவு செய்த விதம் குறித்து அளித்த மனம்திறந்த பேட்டி வருமாறு:-

மெனக்கெடல் என்பது சிலருக்கு அலுப்பான விஷயமாக இருக்கும், சிலருக்கு சுகமான அனுபவம். அந்த வகையில் எனக்கு அது சுகமான அனுபவம். சின்ன ஓட்டை தானே என்ற அலட்சியம் கப்பலையே கவிழ்த்து விடும் அபாயம்…. சின்ன சின்ன விஷயத்திலும் கவனம் செலுத்துவது அழகான படைப்பை தரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

சுனாமி பாதிப்புகள் ஏற்படுத்தி பத்தாண்டுகள் ஆகிவிட்டது. டிசம்பர் 26 அன்று உலகம் ஒரு சோகத்தை சந்தித்தது. டிசம்பர் 25 கிறிஸ்மஸ் கொண்டாடிய சந்தோஷம் நிலைக்காமல் சோகத்தை அள்ளித் தந்தது. அதிலும் கடலோர மாவட்டங்கள் அதிகம் பாதித்தது. அதை தான் இந்த படத்தில் பதிவு செய்திருக்கிறோம். எவ்வளவு பேர் சொத்து, உறவுகள், உடமைகளை இழந்தார்கள் அதில் தொலைந்து போன ஒரு காதல் தான் “கயல்”.

அடிதடி மட்டும் தான் கமர்ஷியலா? அடிதடி என்பது மட்டும் வாழ்வியல் அல்ல. நம்மை கடந்து போகிறவர்களிடம் ஒரு கதை இருக்கு! நாம் கடந்து வந்த வாழ்கையிலும் ஒரு கதை இருக்கு! அதை பதிவு செய்வதில் கூட ஒரு விதத்தில் கமர்ஷியல் இருக்கிறது. எதை பதிவு செய்தாலும் அது ரசிகனுக்கு புதிதாக இருக்க வேண்டும். இல்லை என்றால் நாம் தூக்கி எறியப் படுவோம்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனிதனின் வாழ்க்கை தான் சுகமானதாக அமையும் என்கிற மையக் கருதான் கயலில் காமெடியுடன் சொல்லப் படுகிறது. கடைசி அரைமணி நேரம் யாருமே எதிர் பார்க்காத திருப்பம் இருக்கும்.

இவ்வாறு பிரபு சாலமன் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி