நான்கூட கத்தியில் நடிக்க முதல்நாள் ஸ்பாட்டுக்கு சென்றபோது, விஜய்யை மூடியானவர் யாரிடமும் பேசகூட மாட்டார் என்று சிலர் சொன்னதை நம்பி விலகியே நின்றேன். ஆனால் அவர் தனது ஷாட்டில் நடித்து முடித்ததும் கேரவனுக்குள் செல்லாமல், அனைவரும் அமர்ந்திருக்கும் இடத்துக்கு வந்து ஏதாவது பேசிக்கொண்டிருப்பார். அதே படத்தில் நடிக்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்தாலும் அவர்களிடம் அன்பாக பேசிப்பழகினர்.
அதன்பிறகுதான் விஜய்யை அனைவரிடமும் பேசிப்பழகும் எளிமையான மனிதர் என்பதை புரிந்து கொண்டேன். அதோடு, அவ்வப்போது ஏதாவது ஜோக் அடித்துக்கொண்டேயிருப்பார். அந்த வகையில், விஜய் மாதிரி முன்னணி ஹீரோக்கள் யாருமே சக கலைஞர்களுடன் இவ்வளவு ஜாலியாக பேசிப்பழகுவதை நான் பார்த்ததே இல்லை. அந்த வகையில் விஜய்யின் எளிமையான, யதார்த்தமான கேரக்டர் என்னை ரொம்பவே வியக்க வைத்தது என்கிறார் சமந்தா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி