’ஒரு வாழ்க்கை போதாது’ என்ற தலைப்பில் தனது சுய சரிதையை எழுதி, அதனை விரைவில் வெளியிடவுள்ள நட்வர் சிங், காங்கிரஸ் தலைமைக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவராக கருதப்பட்டவர். கடந்த 2008-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக கட்சியை விட்டு வெளியேறிய நடவர் சிங், சோனியா காந்தி ஏன் பிரதமராக பதவி ஏற்க முன்வரவில்லை என்பது தொடர்பாக சமீபத்தில் ஒரு ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியின் போது ஒரு புதிய கருத்தினை பதிவு செய்துள்ளார். ‘தனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தியைப் போல் நாட்டின் பிரதமராகி விட்டால் தனது தாயார் சோனியாவையும் யாராவது கொன்று விடுவார்கள் என்று அவரது மகன் ராகுல் காந்தி பயந்தார்.
எனவே, ஒரு மகன் என்ற முறையில் சோனியா காந்தி பிரதமராக அனுமதிக்க முடியாது என்று கூறி, ராகுல் காந்தி தான் தடுத்து விட்டார்’ என்று இந்த பேட்டியில் நட்வர் சிங் தெரிவித்துள்ளார்.2004-ம் ஆண்டு சோனியா காந்தியின் வீட்டில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி ஆகியோர் முன்னிலையில் ராகுல் காந்தி தனது கருத்தினை வெளிப்படுத்தியதாக நட்வர் சிங் கூறியுள்ளார்.இந்த உண்மையினை தனது சுய சரிதையில் பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்காவுடன் கடந்த மே மாதம் தனது வீட்டுக்கு வந்திருந்ததாகவும் நட்வர் சிங் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி