இருவரும் விவாகரத்து செய்து கொள்வதை ஹிருத்திக்ரோஷனே அதிகார பூர்வமாக அறிவித்தார். விவாகரத்துக்கான சட்ட நடவடிக்கைகளும் துவங்கியுள்ளன.இந்நிலையில் விவாகரத்துக்கு சம்மதிக்க தனக்கு ஹிருத்திக் ரோஷன் ரூ.400 கோடி ஜீவனாம்சம் தர வேண்டும் என்று சுசானே கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிருத்திக் ரோஷனும் அந்த தொகையை கொடுக்க சம்மதித்து விட்டாராம். ஹிருத்திக் ரோஷனுக்கு மொத்தம் ரூ.1500 கோடி சொத்துக்கள் உள்ளன.
ஜுகு கடற்கரையில் ஹிருத்திக் பெயரில் பிரம்மாண்ட பங்களா வீடு உள்ளது. பெங்களூரில் 100 ஏக்கர் நிலம் உள்ளது. ஆந்தேரியில் நான்கு மாடி கட்டிடம் உள்ளது.சிங்கப்பூரில் ஒரு வீடு இருக்கிறது. இந்த வீடு சுசானே பெயரில் இருக்கிறது. இந்தி திரையுலகில் பல நட்சத்திர ஜோடிகள் விவாகரத்து செய்து பிரிந்துள்ளனர். ஆனால் எந்த நடிகையும் இவ்வளவு பெரிய தொகை ஜீவனாம்சமாக வாங்கியதில்லை என்கின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி