செய்திகள்,தொழில்நுட்பம் பிற நாடுகளின் செயற்கை கோள்களை உளவு பார்க்கும் அமெரிக்க செயற்கைகோள்!…

பிற நாடுகளின் செயற்கை கோள்களை உளவு பார்க்கும் அமெரிக்க செயற்கைகோள்!…

பிற நாடுகளின் செயற்கை கோள்களை உளவு பார்க்கும் அமெரிக்க செயற்கைகோள்!… post thumbnail image
அமெரிக்கா:-பெரும்பாலான நாடுகள் தங்களது நாட்டின் வளம், வானிலை ஆய்வு, கடல்வளம், கல்வி வளர்ச்சி, பாதுகாப்பு போன்றவற்றுக்காக செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்புவதை வழக்கமாக கொண்டு உள்ளன. அண்மையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப்கேனரவல் விண்வெளி மையத்தில் இருந்து ‘டெல்டா 4‘ என்னும் ஒரு ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.

63 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட்டை யுனைட்டட் ஏலியன்ஸ் என்னும் அமெரிக்க நிறுவனம் லாக்கீட் அண்ட் போயிங் என்ற நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இதனைத் தயாரித்து இருந்தது. இதில் சக்தி வாய்ந்த ஒரு ஜோடி செயற்கை கோள்களும் பொருத்தப்பட்டு இருந்தன.இந்த செயற்கைகோள் மற்ற நாடுகள் விண்ணில் செலுத்தும் விண்வெளிக்கலங்களையும், அவற்றின் செயல்பாடுகளையும் துல்லியமாக உளவு பார்ப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி