சென்னை:-திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குனர் லிங்குசாமி தயாரித்துள்ள மஞ்சப்பை 50 நாளை கடந்திருக்கிறது. கடந்த ஜுன் மாதம் 6ம் தேதி வெளிவந்த படம் தற்போது சென்னையில் அபிராமி, பிவிஆர் காம்பளக்ஸ் தியேட்டர்களில் 50 நாளை தொட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் ஒரு சில தியேட்டர்களில் முதல் ஷிப்டிங்கிலும், பல தியேட்டர்களில் செகண்ட் ஷிப்டிங்காகவும் ஓடிக் கொண்டிருக்கிறது.
சுமார் 7 கோடியில் எடுக்கப்பட்ட படம் 3 கோடி வரை விளம்பரம் செய்து வெளியிட்டதில் 20 கோடி சம்பாதித்திருப்பதாக வியாபார வட்டாரங்கள் தெரிவிக்கிறது.விமலுக்கு மீண்டும் ஒரு வெற்றியை கொடுத்து உற்சாகப்படுத்தியது மஞ்சப்பை. லட்சுமிமேனன் ராசியான நடிகை என்பதை இந்தப் படமும் உறுதி செய்தது. ஹீரோவுக்கு நிகரான சம்பளம் வாங்கும் ராஜ்கிரணுக்கு அப்பாவிலிருந்து தாத்தா புரமோஷன் வழங்கியது. சற்குணத்தின் உதவியாளர் என்.ராகவனுக்கு நல்ல இயக்குனர் என்ற பெயரையும், அடுத்து படம் இயக்குவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி