செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் டெபிட், கிரடிட் கார்டில் உள்ள விவரங்களை திருடும் வைரஸ்!…

டெபிட், கிரடிட் கார்டில் உள்ள விவரங்களை திருடும் வைரஸ்!…

டெபிட், கிரடிட் கார்டில் உள்ள விவரங்களை திருடும் வைரஸ்!… post thumbnail image
புதுடெல்லி:-டெபிட் கார்டு மற்றும் கிரடிட் கார்டு விவரங்களை இணைய தளம் வழியாக திருடும் வைரஸ் விஷமிகள் பரப்பி வருவதாக இணைய பாதுகாப்புத் துறையினர் எச்சரித்துள்ளனர். இணையதளம் வழியாக டெபிட் மற்றும் கிரடிட் கார்டின் எண், ரகசியக் குறியீடு ஆகியவற்றைத் தெரிவிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

பி.ஓ.எஸ் எனப்படும், கடைகளில் பயன்படுத்தப்படுகிற கையடக்க கருவியில் டெபிட் கார்டு அல்லது கிரடிட் கார்டை பயன்படுத்தும்போதும் இந்த வைரசைப் பரப்புவதற்கு குறி வைத்து செயல்படுவதாகவும் டெல்லியைச் சேர்ந்த சி.இ.ஆர்.டி எனப்படும் இணையதள பாதுகாப்புத் துறை எச்சரித்திருக்கிறது. ட்ரோஜன் மற்றும் பாட்நெட் வகையைச் சேர்ந்த இந்த வைரசால் ரகசியத் தகவல்களை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி