இப்தார் நிகழ்ச்சியில் பள்ளிவாசல் தலைவர் ஜமால் முகைதீன், செயலாளர் ராஜாமுகமது ஆகியோர் வரவேற்று குரானை வழங்கினர். அப்போது அவர் பேசியதாவது:–
நான் உங்களது உறவினராக இங்கு வந்து கலந்து கொண்டுள்ளேன். இஸ்லாமியத்தில் எனக்கு பிடித்தது 5 முறை தொழுகை செய்வதுதான். எனது முதல் படமான ‘அவள் ஒரு பச்சைக்குழந்தை’ என்ற படத்திற்கு 1978–ம் ஆண்டே ஒரு இஸ்லாமிய சகோதரர்தான் ரூ.1 லட்சம் பணம் கொடுத்து உதவினார். அன்று கொடுத்த 1 லட்சம் பணம் தற்போது ரூ.10 கோடிக்கு சமமாகும்.
விஜய்யை பள்ளியில் எல்.கே.ஜி.யில் சேர்த்தபோது சான்றிதழில் மதம் என்ற இடத்தில் இந்தியன் என்று குறிப்பிட்டேன். தற்போதும் விஜய் சான்றிதழில் இந்தியன் என்றுதான் இருக்கும். தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களில், குறிப்பாக 6 மாவட்டங்களில் இஸ்லாமிய சகோதரர்கள் தான் விஜய் ரசிகர் மன்ற தலைவராக உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி