‘அமர்க்களம்’ படத்தில் நடிக்கும்போது அவருடன் ஜோடியாக நடித்த ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் கடந்த 2000-ம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் அனோஸ்கா என்ற பெண் குழந்தை இருக்கிறாள்.
இந்நிலையில் ஷாலினி மீண்டும் கர்ப்பமாகியிருக்கிறாராம். இதனால் அஜீத் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். இரண்டாம் குழந்தையின் வருகையை எதிர்பார்த்து, தனது மனைவி ஷாலினியை கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறாராம்.
அஜீத் தற்போது கவுதம் மேனன் இயக்கிவரும் படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படப்பிடிப்புகளில் பிசியாக இருந்தாலும் அஜீத் தன் மனைவி ஷாலினி மற்றும் மகளை கவனமாக பார்த்து வருகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி